இந்தியாவுடன் எமக்கு பகையில்லை | அனுரகுமார அறிவிப்பு

5 months ago
Sri Lanka
aivarree.com

இந்தியாவுடனோ இந்திய மக்களுடனோ தமது கட்சி ஒருபோதும் முரண்பட்டதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்திய அரசுகள் எடுத்த முடிவுகளும் இலங்கை அரசுகளின் பதில்களுமே தனது கட்சியால் விமர்சிக்கப்பட்டது என்றும் அவர் கூறுகிறார்.

மௌபிம பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“எங்களுக்கு இந்தியாவுடனோ அல்லது இந்திய மக்களுடனோ மோதல் இருந்ததில்லை. 

குறிப்பிட்ட காலங்களில் இந்திய அரசுகள் எடுத்த முடிவுகளும் அது தொடர்பான இலங்கை அரசுகளின் நடவடிக்கைகளும் மட்டுமே எங்களிடம் இருந்தன”, என்று அவர் கூறினார்.

அண்மையில் அவர் இந்திய அழைப்பின் பேரில் அங்குச் சென்று, பல முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.