பிளேஸ்டேஷன் ஸ்டுடியோவில் புரட்சியை ஏற்படுத்திய ‘ஸ்பைடர் மேன் 2’

6 months ago
Gossip
aivarree.com

மார்வெலின் ‘ஸ்பைடர் மேன் 2 கேம்’ அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணிநேரங்களில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான அதன் பிரதிகள் விற்றது.

இது பிளேஸ்டேஷன் ஸ்டுடியோவின் மிக வேகமாக விற்பனையாகும் கேம் ஆகும் என சோனி தெரிவித்துள்ளது.

குறித்த பிளேஸ்டேஷன் கேம் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டதிலிருந்து அமோகமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

எனினும் அதன் நீளம் குறித்து சில விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

ஸ்பைடர் மேன் 2 என தலைப்பு இருந்தபோதிலும், இது 2018, 2020 இல் வெளியானதைத் தொடர்ந்து வெளியிடப்படும் மூன்றாவது பிளேஸ்டேஷன் கேம் ஆகும்.