பாம் எண்ணெய் தடையை நீக்க பரிந்துரை

2 weeks ago
aivarree.com

பெருந்தோட்ட அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பாம் எண்ணெய் தடையை நீக்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது.

தென்னை ஆராய்ச்சி வழிகாட்டுதல்களின்படி தடையை நீக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது

“தடையை நீக்குவது நிலையான விவசாயம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முற்போக்கான அணுகுமுறையாக இருக்கும்” என்று இலங்கையில் உள்ள பாம் எண்ணெய் தொழில் சங்கம் (POAS) தெரிவித்துள்ளது.

சிறிய மற்றும் நடுத்தரத் துறை விவசாயிகள் மற்றும் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) வழங்கிய தொடர்ச்சியான பிரதிநிதித்துவங்களின் காரணமாக அமைச்சரவையின் பணிப்புரையின் பேரில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

பாம் எண்ணெய் உற்பத்தி விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும், இது மற்ற விவசாய பயிர்களை விட அதிக வருமானம் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடையை நீக்குவது விவசாயிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், நிலையான விவசாய நடைமுறைகளில் புதிய முதலீடுகளுக்கு வழி வகுக்கும் எனவும் நிபுணர் குழு அறிவித்துள்ளது.