நாட்டில் மீண்டும் அடையாளம் காணப்பட்ட மலேரியா நோயாளர்கள்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

2024 ஆம் ஆண்டு இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து நாடு திரும்பியவர்களின் மத்தியிலேயே அதிகளவான மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இறுதியாக 2012 ஆம் ஆண்டு மலேரியா நோய் பதிவாகியிருந்த போதிலும் 2023 ஆம் ஆண்டு 62 மலேரியா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாக சமூக மருத்துவ நிபுணர் புபுது சூளசிறி குறிப்பிட்டுள்ளார்.