வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்த புகையிரத தொழிற்சங்கங்கள்

4 months ago
Sri Lanka
aivarree.com

புகையிரத சாரதிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இதேவேளை லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிறுத்தி கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த பணிப்புறக்கணிப்பு வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் குசலானி டி சில்வா தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்