கெஸ்பேவையில் 30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது

1 week ago
Sri Lanka
aivarree.com

கெஸ்பேவ பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் சந்கேநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 13 கிலோ 106 கிராம் ஹெரோயின், 164 கிராம் ஹஷீஸ் போதைப்பொருள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 2 கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

டுபாயில் தலைமறைவாகியுள்ள திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபட்டுவரும் ‘அஹங்கல்லே லொக்கு பெட்டி’ உடன் இணைந்து செயற்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.