சபாநாயகருக்கு எதிராக சஜித்துடன் இணைந்த அனுரகுமார

2 months ago
Sri Lanka
aivarree.com

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் சாபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க எதிர்க்கட்சிகள் பலவும் முன்வந்துள்ளன.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக நீதித்துறை வழங்கிய அறிவுறுத்தல்களை புறக்கணித்ததன் மூலம் சபாநாயகர் நாடாளுமன்ற நடைமுறைகளை மீறியதால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.