IMF உடனான ஒப்பந்தத்தின் பின்னர் முதலீடுகள் அதிகரிப்பு – திலும் அமுனுகம

2 weeks ago
aivarree.com

இந்த ஆண்டு 4 முதல் 4.5 பில்லியன் டொலர் வரையிலான முதலீட்டை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து திட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆண்டு 1.5 பில்லியன் டொலர் முதலீட்டுக்கான இலக்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாடு 1.8 பில்லியன் டொலர் முதலீடுகளைப் பெற முடிந்தது என்றும் அவர் கூறினார்.

மேலும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர், முதலீடுகள் கணிசமான அளவில் நாட்டிற்குள் வருவதாகவும் அவர் கூறினார்.