IMFக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை இலங்கைக்கு அனுப்பிய சீனா

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் மறுசீரமைப்புக்கு சீனா தனது ஆதரவை தெரிவித்து இலங்கையின் நிதியமைச்சுக்கு கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு  ஆதரவை தெரிவித்து இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்கு கடிதம் அனுப்பிய சில நாட்களில், சீனாவின் கடிதம் கிடைத்துள்ளது.

இந்தியாவைப் போன்று கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சீனா அரசாங்கம் சாதகமான முறையில் பதிலளிக்கும் என இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக சீனா இலங்கையின் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.

எனினும் இந்தியா அனுப்பிய கடிதத்தைப் போன்றே சீனாவும் IMFகு நேரடியாக கடிதத்தை அனுப்ப வேண்டும் என இலங்கை தரப்பில் கோரப்பட்டுள்ளது.

-தசண்டேமோர்னிங்-