தங்க விலையில் வீழ்ச்சி

2 weeks ago
aivarree.com

கடந்த சில நாட்களாக உயர்வடைந்திருந்த தங்கத்தின் விலையானது இன்று (24) சற்று வீழ்ச்சிகண்டுள்ளது.

முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 700,552 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் 24,720 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுண்181,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 190,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு ஒன்று 174,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.