இலங்கையின் செயற்பாடு தொடர்பில் சீனா கவலை

1 month ago
Sri Lanka
aivarree.com

சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வெளிப்படையான நியாயமான சூழல் அவசியம் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்த்தனவிற்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை தீர்மானங்களை எடுக்கும்போது வெளிநாடுகளின் செல்வாக்கிற்கு உட்படுவது குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கவலை வெளியிட்டுள்ளார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தைகள் சினேகபூர்வமான சுமூகமான முறையில் இடம்பெற்றதாகவும் சீன ஜனாதிபதி மூன்றாவது நாட்டின் பெயரை குறிப்பிடவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடனான சந்திப்பின்போது சீன பிரதமர் லீ கியாங் இலங்கை சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு விதித்துள்ள தடை குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அதேநேரம், எரிபொருள் மீள்நிரப்புதலுக்காகவே ஜேர்மன் கப்பலுக்கு அனுமதி வழங்கபட்டதாக பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது நலன்களுக்கு எதிராக எந்த நாடும் தனது பகுதியை பயன்படுத்த அனுமதிக்கவில்லை எனவும் தினேஸ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.