நாடளாவிய ரீதியில் 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

3 weeks ago
aivarree.com

நாடளாவிய ரீதியில் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய 726 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

விலைப்பட்டியல் இன்றி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச் சாட்டுக்களுடன் தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரப்படவுள்ளதாக அதிகாரசபையின் விசேட விசாரணை பணிப்பாளர் சஞ்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7,627 வர்த்தக நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.