பாகிஸ்தானில் பாரிய குண்டு வெடிப்புகள் – பலர் பலி

5 months ago
World
aivarree.com

பாகிஸ்தான் பலோசிஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

அங்குள்ள பிஸின் மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளர் ஒருவரது கட்சி அலுவலத்தில் இந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அலுவலகத்தில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

பின்னர் இடம்பெற்ற மற்றுமொரு குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி இருக்கின்றன.