மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பசிலாம்

3 months ago
Gossip
aivarree.com

சிறிங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக அவர் அமெரிக்க பிரஜாவுரிமையையும் ரத்து செய்துவிட்டு, இலங்கை திரும்பவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இருந்த போதும், பசில் ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து கட்சி உத்தியோகப்பூர்வமாக விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.