மூன்றாவது தவணையில் 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கும் IMF

1 week ago
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணைக்கான கலந்துரையாடல் நாளை (12) ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கைக்கான மூன்றாம் தவணை கடன் தொகையை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு குறித்து கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது தவணைக்கான வெற்றிகரமான மீளாய்விற்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்

மேலும் சர்வதேச நாணய நிதியத்தினால் மூன்றாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது