புகலிட திட்டத்தின் கீழ் 2,000 மில்லியன் ரூபா செலவில் வீடமைப்புத் திட்டம் – டக்ளஸ்

2 weeks ago
Sri Lanka
aivarree.com

கிளிநொச்சி மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 3,200 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் 2,000 வீடுகள் அமைத்தல் மற்றும் அனைவருக்கும் புகலிடம் திட்டத்தின் கீழ் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் வீடமைப்புத் திட்டம், 1,680 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பொதுச்சந்தை கட்டடம் அமைத்தல், பஸ் நிலைய அபிவிருத்தி தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று கலந்துரையாடப்பட்டது.

இதன்போது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக விவசாய நடவடிக்கை, குளங்கள் புனரமைப்பு, குடிநீர் விநியோகம், சந்தைக் கட்டடம் அமைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .

மேலும் சமகாலத்தில் செயற்படுத்தும் நிலையிலுள்ள 500 மில்லியன் ஒதுக்கீட்டிலான பூநகரி நகராக்க திட்டம், 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.