ரஷ்யா – அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் மோதல்

2 years ago
World
aivarree.com

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.


யுக்ரெயின் எல்லைப் பகுதியில் ரஷ்யா தமது துருப்பினரை குவித்து வரும் நிலையில், அதுதொடர்பான விவாதம் ஒன்றுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. 


பாதுகாப்பு சபையில் நேற்று இந்த விவாதம் இடம்பெற்ற வேளையில், அமெரிக்காவின் தூதுவர் லிண்டா தோமஸ்-க்ரீன்ஃபீல்ட், ரஷ்யாவின் தூதுவருடன் கடுமையான சொற்போரில் ஈடுபட்டார். 


ரஷ்யா சுமார் 100,000 காலாற் படையினரையும், யுத்த தாங்கிகள், ஆட்லெறி மற்றும் எரிகணைகளை யுக்ரெயின் எல்லையில் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.