முக்கியமான கட்சித் தலைவர் கூட்டம் வெள்ளிக்கிழமை

1 year ago
Sri Lanka
aivarree.com

முக்கியமான கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் அய்வரி செய்திகளிடம் இந்தத் தகவலை வழங்கினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாத தினங்கள் அன்றையதினம் தீர்மானிக்கப்படவுள்ளன.

எதிர்வரும் 25ம் திகதி பாராளுமன்றின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜனாதிபதி அன்றைய தினம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.