மனிதர்களை விட உலகை சிறப்பாக கையாள முடியும் – AI ரோபோக்கள்

11 months ago
World
aivarree.com

ஜெனிவாவில் நடந்த ‘AI for Good’ மாநாட்டில் ஒன்பது மனித உருவ ரோபோக்களின் ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

முதல் ரோபோக்களின் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது ரோபோக்களிடம் ஊடகவியலாளர்களினால் கேள்விகளும் எழுப்பப்பட்டன.

செயற்கை நுண்ணறிவால் (AI ) இயக்கப்பட்ட மனித உருவம் கொண்ட இந்த ரோபோக்கள் மனிதர்களை விட உலகை சிறப்பாக கையாள முடியும் என்று கூறியது.

ஆனால் செயற்கை நுண்ணறிவின் வேகமாக வளரும் திறனைத் தழுவும்போது மனிதர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சமூக ரோபோக்கள் குறிப்பிட்டன.

மேலும் மனித உணர்வுகளின் திறனை தம்மால் இன்னும் பெற முடியாதுள்ளது என்பதை ரோபோக்கள் கூட்டாக ஒப்புக் கொண்டதுடன், மனிதர்களின் வேலைகளை திருடவோ அல்லது அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யவோ மாட்டோம் என்றும் ரோபோக்கள் இதன்போது உறுதியளித்தன.