பண வீக்கத்தில் பாரிய வீழ்ச்சி

10 months ago
aivarree.com

2023 ஜூன் மாதத்திற்கான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் 10.8% ஆக பதிவாகியுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கையின்படி, கடந்த மே மாதம் நாட்டின் பிரதான பண வீக்கம் 22.1% ஆக காணப்பட்டது.

கடந்த மே மாதம் 15.8% ஆக காணப்பட்ட உணவு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 2.5% ஆகக் குறைந்துள்ளது.

கடந்த மே மாதம் 27.6% ஆக காணப்பட்ட உணவு அல்லாப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 18.3% ஆகக் குறைந்துள்ளது.