பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.