நேபாளத்தின் எவரெஸ்ட் சிகரம் அருகே 6 பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் விபத்து

10 months ago
World
aivarree.com

நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அருகே செவ்வாயன்று (11) ஆறு பேருடன் சென்ற ‘மனங் ஏர்’ என்ற ஹெலிகொப்டர் காணாமல் போனதாக விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் சோலுகும்புவில் இருந்து காத்மாண்டு நோக்கிப் பறந்து கொண்டிருந்த குறித்த ஹெலிகொப்டர் லாம்ஜுராவில் விபத்துக்குள்ளானதாக நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் நேபாளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகொப்டர், காத்மாண்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​காலை 10:15 மணியளவில் கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஹெலிகொப்டரில் பயணம் செய்தவர்கள் மெக்சிகோவைச் சேர்ந்த ஐவர் என்றும், அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.