நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன் – போப் பிரான்சிஸ் ஹாசியம்

1 year ago
World
aivarree.com

சுவாச நோய் தொற்று காரணமாக மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் சனிக்கிழமை ரோம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் 86 வயதான போப், அவருக்காகக் காத்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளிடம் “நான் பயப்படவில்லை, நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன்,” என்று கூறினார்.

பின்னர் ரோம் ஜெமெல்லி வைத்தியசாலைக்கு வெளியே நிருபர்களின் கேள்விகளுக்கு போப் நின்ற நிலையில் பதிலளித்ததுடன், அழுதுகொண்டிருந்த ஒரு பெண்ணை கட்டித் தழுவி ஆசிர்வதித்தார்.

அதனையடுத்து காரில் ஏறி வத்திக்கான நோக்கிப் புறப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆர்ஜென்டின போப்பாண்டவர், தனது வாழ்நாள் முழுவதும் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார்.