தெற்கு ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலை

10 months ago
World
aivarree.com

தெற்கு ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் கடும் வெப்ப நிலை நிலவுகிறது.

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், குரோஷியா மற்றும் துருக்கியின் சில பகுதிகளில் வெப்பநிலை 40C (104F) ஐ விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியில், வெப்பநிலை 48.8C (119.8F) வரை உயரலாம். ரோம், போலோக்னா, புளோரன்ஸ் உள்ளிட்ட 10 நகரங்களுக்கு வெப்ப நிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக வடக்கு இத்தாலியில் 44 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.