தங்கவிலையில் தடாலடி அதிகரிப்பு

10 months ago
aivarree.com

உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு அவுண்ஸ் தங்கம் 24 டொலர்களால் அதிகரித்து 1957 டெலர்களாக பதிவாகியுள்ளது.

இம்மாதம் தங்கத்தின் விலை மீண்டும் 2000 டொலர்களை தாண்டும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல உள்நாட்டிலும் தங்கத்தின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் இலங்கை நகை வர்த்தகர்கள் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி 24 கரட் தங்கம் ஒரு பவுன் 166,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 153,500 ரூபாவாகவும் நிலவியது.

இந்த விலை இன்று இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.