சோகத்துடன் முடிவுக்கு வந்த காணால் போன நீர் மூழ்கி கப்பலை தேடும் பயணம்

11 months ago
World
aivarree.com

டைட்டானிக் கப்பலின் சிதைவுக்கான ஆய்வு பயணத்தின் போது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலை தேடும் மற்றும் மீட்புப் பணி வியாழக்கிழமை (22) சோகத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் அடிவாரத்தில் கப்பல் அழிக்கப்பட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் இருந்த ஐந்து நபர்களும் உயிரிழந்தாகவும் அமெரிக்க கடலோர காவல்படை உறுதிபடுத்தியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூரப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன கப்பல் பேரழிவுகரமான வெடிப்பினை சந்தித்தாக அமெரிக்க கடலோர காவல்படை கூறியது.

எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிவதற்காக வடிவமைக்கப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் ஒலியியல் கண்டறிதல் அமைப்பு நீர்மூழ்கிக் கப்பல் காணால்போன கப்பல் தொடர்பான தேடல் பணியைத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குப் பின்னர் வெடி சத்தத்தை கேட்டதாக முன்னர் கூறியிருந்தது.

கனடாவின் கிழக்குக் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல், வடக்கு அட்லாண்டிக் முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் ஒரு பெரிய தேடலைத் தூண்டியது, அமெரிக்கா மற்றும் கனேடிய முகவர்கள் மற்றும் பிற சர்வதேச உதவிகளையும் இது கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.