சீன ஜனாதிபதியை சந்திக்க விரும்பும் யுக்ரைன் ஜனாதிபதி

1 year ago
World
aivarree.com

சீனாவின் ஜனாதிபதி க்சீ ஜின்பிங்வுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பதுடன் இருப்பதாக, யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் யுக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமாகி ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான மத்தியஸ்த்தத்தை வகிக்க சீனா விருப்பம் அறிவித்திருந்தது.

இதனை வரவேற்றுள்ள யுக்ரைன் ஜனாதிபதி, சீனா உண்மையாகவே ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விநியோகிக்காது என்று நம்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இதுதொடர்பான சீனாவின் 12 புள்ளி யோசனைகளில், யுக்ரைனில் இருந்து ரஷ்யபடையினர் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்படவில்லை என்பதோடு, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடைகளையும் கண்டித்துள்ளது.

யுக்ரைன் ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பாக சீன தரப்பிலிருந்து இன்னும் எந்த கருத்துகளும் சொல்லப்படவில்லை.