சட்ட நவடிக்கையை கைவிடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

1 year ago
Sri Lanka
aivarree.com

தேர்தலுக்காக 2023 ஆம் ஆண்டின் பாதீட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருந்தது. 

நிதி அமைச்சின் செயலாளருக்கு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்னும் அமல்படுத்தப்படவில்லை.

மாறாக இந்த உத்தரவின் ஊடாக பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்படுவதாக அரசாங்க தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

தேர்தலுக்கான நிதியை வழங்காமைக்கு எதிராக, நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதிக்கு எதிராகவோ அல்லது நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராகவோ சட்ட ரீதியான நடவடிக்கைகள் எதனையும் தேர்தல் ஆணைக்குழு எடுக்காது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சட்ட நடவடிக்கை முன்னெடுப்பதற்கான சட்ட உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. 

பின்னணி

உள்ளாட்சி தேர்தல் மார்ச் 9ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், நிதி அமைச்சும் திறைசேரியும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேவையான நிதியை வழங்கவில்லை. 

தேர்தல் ஆணைக்குழு உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் 25க்கும், தபால் வாக்களிப்பை இன்று (28), நாளை (29), 30 மற்றும் 3 மற்றும் ஏப்ரல் 3 ஆகிய தினங்களுக்கு மாற்றியது.

ஆனால் உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு இருந்தபோதிலும் தேவையான நிதி இன்னும் வெளியிடப்படவில்லை.  

இந்த பின்னணியில், தபால் வாக்களிப்பை தள்ளிப்போட்டதுடன், ஏப்ரல் 25இல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கும் புதிய திகதி ஒன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.