க.பொ.த. (ச/த) செயல்முறை பரீட்சை தொடர்பான அப்டேட்

10 months ago
aivarree.com

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயல்முறைப் பரீட்சைகள் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இசை, நடனம், நாடக – அரங்கியல் ஆகிய பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சைகள் 2023 ஆகஸ்ட் 02- 12 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடங்களில் செயல்முறைப் பரீட்சைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை இந்த வருடமும் அதே முறைகள் பயன்படுத்தப்படும்.

பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளின் பரீட்சை அனுமதிகள் எதிர்வரும் காலங்களில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் செயல்முறைப் பரீட்சைகள் தொடர்பான விசாரணைகள் உள்ளவர்கள் பரீட்சை திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 அல்லது 011 2 784208, 011 2 784537 அல்லது 011 2 786616 ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.