கொவிட் முடிவுக்கு வருகிறது -விஞ்ஞானிகள் நம்பிக்கை.

2 years ago
World
aivarree.com

கொவிட் 19 தொற்றுநோயை ஏற்படுத்துகின்ற கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரோன், உலக நாடுகள் பலவற்றில் பரவி இருக்கிறது.


மார்ச் மாத இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் 60 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரொன் தொற்ற வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது.


ஆனால் ஒமிக்ரோன் திரிபு கொவிட் தொற்றுநோயின் இறுதிக்கட்டத்தை நோக்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


குறிப்பாக இது பெண்டமிக் என்று சொல்லப்படுகின்ற பெருந்தொற்று நிலையிலிருந்து, பருவகால காய்ச்சல் போன்ற நிலைக்கு நகர்வதாக உலக சுகாதார ஸ்தாபனமும் தெரிவித்திருக்கிறது.