கொழும்பு மாவட்ட காணிகளின் பெறுமதியில் பெரும் அதிகரிப்பு

1 year ago
aivarree.com

கொழும்பு மாவட்டத்தில் காணிகளின் பெறுமதி சராசரியாக 14.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

வருடாவருட காணி பெறுமதி அளவீட்டு குறிக்காட்டியின் அடிப்படையில், 2022இன் இரண்டாம் அரையாண்டில் இந்த பெறுமதி அதிகரிப்பு மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி வர்த்தக காணிகளின் பெறுமதி 15.7 சதவீதத்தினாலும் குடியிருப்பு காணிகளின் பெறுமதி 15.2 சதவீதத்தினாலும், கைத்தொழில் காணிகளின் பெறுமதி 13.6 சதவீதத்தினாலும் உயர்ந்துள்ளன.

எனினும் கைத்தொழில் காணிகளது வருடாந்த பெறுமதி அதிகரிப்பு வீதம் குறைவடைந்துள்ளதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.