கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவிய வடகொரியா

10 months ago
World
aivarree.com

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவியதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


நீண்ட தூர ஏவுகணை புதன்கிழமை (12) காலை ஜப்பானிய கடற்பகுதியில் தரையிறங்கியதாகவும் இரு நாடுகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

வடகொரியாவின் இந்த ஏவுதல், அதன் எல்லையில் சமீபத்தில் அமெரிக்க உளவு விமானம் ஊடுருவியதாகக் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் அச்சுறுத்தலைத் தொடர்ந்து வந்துள்ளது.

ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ வடகொரியாவின் அண்மைய ஏவுகணை 74 நிமிடங்கள் பறந்து 6,000 கிமீ (3,728 மைல்கள்) உயரத்தை எட்டியதாக கூறினார்.

இது கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடலில் விழுந்ததாக ஜப்பானிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.