உக்ரேன் போர் 500 நாட்கள் ; 9,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழப்பு

11 months ago
World
aivarree.com

2022 பெப்ரவரி 24, அன்று ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமித்ததில் இருந்து 500 குழந்தைகள் / சிறுவர்கள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதுவரை உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியது.

உக்ரேனில் போர் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் உக்ரேனில் உள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு பணியகத்தின் (HRMMU) இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (08) வந்துள்ளது.

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உக்ரேனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைவாக இருந்த போதிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜூன் 27 அன்று, கிழக்கு உக்ரேனில் உள்ள கிராமடோர்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

உக்ரேனின் மேற்கு நகரமான லிவிவில் வியாழன் காலை முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 37 பேர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.