இலங்கையில் குண்டுத் தாக்குதல், பாதுகாப்பு அமைச்சு விளக்கம்

2 years ago
Sri Lanka
aivarree.com

இலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கை (தமிழ் வடிவம்)

01. தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் புலனாய்வுத் தகவல் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு பொலிஸ் மா அதிபர் அனுப்பிய கடிதம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

02. இம்மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் ‘கறுப்பு ஜூலையை’ தூண்டும் வகையில் நடத்தப்படக் கூடிய பயங்கரவாதத் தாக்குதலின் வெளிப்பாடு, புலனாய்வு வட்டாரங்கள் மூலம் கிடைத்த உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் கவனத்தில் கொள்ளப்பட்டது.

03. இவை சரிபார்க்கப்படாத புலனாய்வுத் தகவல்கள் மற்றும் ‘கறுப்பு ஜூலை’யைத் தூண்டும் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்வதற்குத் தொடர்புபடுத்தும் எந்த அடிப்படைத் தகவலும் இல்லை.

04. இவ்வாறான தாக்குதல் பயங்கரவாத குழுக்களால் மேற்கொள்ளப்படலாம் எனவும், அரசாங்கத்திற்கு எதிரான குழுக்கள் அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்கும், ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கும் வன்முறையைத் தூண்டலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. பொதுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.