அலி சப்ரி ரஹீம் MP அபராதம் விதிக்கப்பட்டு விடுவிப்பு

12 months ago
Sri Lanka
aivarree.com

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (MP) அலி சப்ரி ரஹீம், அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் ஸ்மார்ட்ஃபோன்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். 

விசாரணையின் விளைவாக, ரஹீமுக்கு 7.5 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

அபராத தொகையை செலுத்தியவுடன் எம்.பி விடுவிக்கப்பட்ட போதும், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சுங்க அதிகாரிகளின் காவலில் உள்ளன.

இலங்கை சுங்கப் பிரிவினர் நடத்திய சோதனையில், ரஹீம் வைத்திருந்த 74 மில்லியன் ரூபா பெறுமதியான 3.397 கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டன.

மேலும், அவரது பொதியில் இருந்த 91 ஸ்மார்ட்போன்களை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் – அவற்றின் மதிப்பு ரூ. 4.2 மில்லியன் ஆகும்.