ஹொங்காங்கில் $6.2 மில்லியனுக்கு ஏலம் போன கடிகாரம்

2 weeks ago
World
(65 views)
aivarree.com

ஒஸ்கார் விருது பெற்ற “தி லாஸ்ட் எம்பரர்” திரைப்படத்தின் அடிப்படையை உருவாக்கிய சீனாவின் கிங் வம்சத்தின் கடைசிப் பேரரசருக்குச் சொந்தமான ஒரு கடிகாரம் செவ்வாயன்று (23) நடந்த ஹொங்காங் ஏலத்தில் 6.2 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனை ஆகியுள்ளது.

இந்த கடிகாரம் ஒரு காலத்தில் சீனாவின் கடைசி பேரரசர் ஐசின்-ஜியோரோ புயிக்கு சொந்தமானது என்று லண்டனை தளமாகக் கொண்ட ஏல நிறுவனமான பிலிப்ஸ் தெரிவித்துள்ளது.

பேரரசர்களுக்குச் சொந்தமான மற்றும் ஏலத்தில் விற்கப்பட்ட ஏனைய கைக்கடிகாரங்களில், கடைசி எத்தியோப்பியப் பேரரசர் ஹெய்லி செலாசிக்கு சொந்தமான படேக் பிலிப் கடிகாரமும் அடங்கும்.

இது கடந்த 2017 ஆம் ஆண்டில் 2.9 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனது.

அதேநேரம், வியட்நாமின் கடைசி பேரரசர் பாவ் டாய்க்கு சொந்தமான ஒரு ரோலக்ஸ் கடிகாரம் 2017 ஆம் ஆண்டு 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு ஏலம் போனமையும் குறிப்பிடத்தக்கது.