6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

11 months ago
aivarree.com

சதொச நிறுவனம் மேலும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உடன் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.

இதன்படி,

LSLபால் மா(400 கிராம்) ரூ.50 குறைந்து ரூ.1,030 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காய்ந்த மிளகாய் 1 கிலோ ரூ.45 குறைந்து ரூ.1,350 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிவப்பு பருப்பு ரூ.10 குறைந்து ரூ.325 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மொத்த விற்பனை சோயா மீட் 1 கிலோ 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.660 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரிய வெங்காயம் 1 கிலோவுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ.129 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி 1 கிலோ 4 ரூபாய் குறைந்து 239 ரூபாவாக உள்ளது.