தங்க விலையில் மீண்டும் சரிவு

11 months ago
aivarree.com

கொழும்பு செட்டியார்த் தெருவில் தங்கத்தின் விலையில் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 153,000 ரூபாவாகவும் விற்பனையாகிறது.

நேற்றைய நாளைக் காட்டிலும் இன்று தங்கத்தின் விலை 1000 ரூபாவால் வீழ்ச்சியடைந்திருப்பதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.