எல்லை தாண்டிய பெல்கொரோட் தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் பலி

11 months ago
World
aivarree.com

பல உக்ரேனிய வீரர்கள் திங்களன்று (22) ரஷ்ய பிராந்தியமான பெல்கோரோட் எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.

எனினும் உக்ரேனிய வீரர்கள் ரஷ்ய இராணுவ வீரர்களினால் தடுக்கப்பட்டதாகவும், அவர்களுடனான மோதலில் 70 க்கும் மேற்பட்ட உக்ரேனியர்கள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.

மேலும் இந்த ஊடுருவவில் நான்கு கவச மற்றும் ஐந்து பிக்கப் வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உக்ரேன் மீதான மொஸ்கோ படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, ரஷ்ய எல்லையில் மிகவும் துணிச்சலான தாக்குதலில் எல்லைப் பகுதிக்குள் ஊடுருவிய ஆயுதக் குழுக்களை அழிக்க செவ்வாயன்று ஜெட் மற்றும் பீரங்கிகளை அனுப்பியதாகவும் ரஷ்யா கூறியது.