மதுபானங்களின் விலைகள் குறையுமா?

12 months ago
Sri Lanka
aivarree.com

நாட்டில் மதுபானங்களின் விலைகளை குறைக்குமாறு சிலத் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி அண்மையில் மதுபான வகைகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக செய்திகளும் வெளியாகி இருந்தன.

கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட வரிகளின் விளைவாக மதுபான வகைகளின் விலைகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.

இதன் காரணமாக தற்போது மதுபான விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மதுவரி திணைக்களத்தின் வருமானமும் கணிசமாக குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மதுபானம் மற்றும் பீயர் விற்பனை 40 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மது மற்றும் பியர் விற்பனை வீதம் குறைந்து வருவதாகவும் உற்பத்தி நிறுவனங்கள் நிதி அமைச்சிடம் தெரிவித்துள்ளன.

அதிக விலையே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என உற்பத்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்நிலையில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் இடையில் இம்மாத ஆரம்பத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி மதுபானத்துக்கான பெறுமதிசேர் வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இதற்கு புறம்பான கருத்தை நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நேற்று பாராளுமன்றில் வைத்து வெளியிட்டார்.

எக்காரணம் கொண்டு மதுபான வகைகளின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தற்போது மது விற்பனை குறைவடைந்துள்ளது. ஆனால் அதற்காக அவற்றின் விலைகளை குறைக்க முடியாது.

நாட்டினினும் பணவீக்கமான பாரியளவில் அதிகரித்து தற்போது குறைவடைந்து வருகிறது.

இதனால் நாட்டில் ஏனைய பொருட்களின் விலைகளும் பாரியளவில் அதிகரித்துள்ளன.

ஏனைய பொருட்களின் விலைகளை குறைக்காமல், மதுபானத்தின் விலைகளை மட்டும் குறைப்பது நியாயமில்லை.

அத்துடன் மதுபான பாவனையால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்களுக்கான மருத்துவ செலவினங்களும் அதிகரிக்கின்றன.

எனவே இப்போதைக்கு மதுபான வகைகளின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது என்று அவர் கூறியுள்ளார்.