வாகன இறக்குமதி தொடர்பான புதிய அப்டேட்

10 months ago
aivarree.com

இலங்கைக்கான ஜப்பானிய வாகனங்கள் இறக்குமதியை மிக விரைவில் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகள் இலங்கை வாகன இறக்குமதியாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதுள்ள உடன்படிக்கைகளின் பிரகாரம் இந்த வாய்ப்பு கிடைக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கையின் வாகன இறக்குமதியாளர்கள் பல தடவைகள் இலங்கை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.