T20 உலகக் கிண்ண தொடருக்கான தூதுவராக உசைன் போல்ட் நியமனம்

3 weeks ago
SPORTS
aivarree.com

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) 2024ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக்கிண்ண தொடருக்கான தூதுவராக ஒலிம்பிக் ஜாம்பவான் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை ICC உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில், மிகவும் வேகமாக ஓடக்கூடிய நபராக சாதனை படைத்த உசைன் போல்ட், தற்போது ICC 2024 ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கிண்ண தொடருக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.