கடவுச்சீட்டு வழக்கிலிருந்து விடுதலையானார் விமல்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

கடவுச்சீட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச விடுவிக்கப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச குடிவரவுச் சட்டத்தை மீறிச் செயலற்ற கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகக் கூறி அவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.