BREAKING: லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு

4 months ago
aivarree.com

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் திரு.முதித பீரிஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி…

12.5 கிலோ எரிவாயு ரூ.135 குறைக்கப்பட்டு புதிய விலை 4,115 ரூபா

5 கிலோ எரிவாயு 55 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 1,652, ரூபா

2.3 கிலோ எரிவாயு 23 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலை 772 ரூபா