T20 உலகக் கிண்ணம் – இந்திய அணி அறிவிப்பு

3 weeks ago
SPORTS
aivarree.com

ஜூன் மாதம் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ண தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஹர்திக் பாண்டியா துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பல மாதங்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத ரிஷப் பண்ட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று, மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.