எரிபொருள் விலையை திருத்திய ஐ.ஓ.சி., சினோபெக்

5 months ago
aivarree.com

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யும் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களான சினோபெக், ஐ.ஓ.சி. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைக்கே எரிபொருள் விலையை திருத்தியுள்ளன.

அதன்படி, இரு நிறுவனங்களும், டீசல் ஒரு லீற்றர் 329 ரூபாவுக்கும், 92 ஒக்டேன் பெற்றோல் 346 ரூபாவுக்கும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்று 247 ரூபாவுக்கும், 95 ஒக்டேன் பெற்றோல் 426 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 434 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.