நீரிழிவு நோய் தொடர்பில் பாடசாலைகளில் விசேட கணக்கெடுப்பு

2 months ago
Sri Lanka
aivarree.com

எதிர்வரும் நாட்களில் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை கண்டறிய விசேட கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சோதனையில், உடல் பருமன், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை ஆகிய இரண்டு காரணிகள் ஆராயப்பட்டதாகவும், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் இந்த ஆபத்துக் காரணிகளால் உயிரிழந்து இருப்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்பனை செய்யப்படும் உணவு தொடர்பில் சுகாதார அமைச்சினால் முன்னர் தயாரிக்கப்பட்ட ஆலோசனை தொடர் தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கல்வி அமைச்சின் செயலாளரின் நேரடித் தலையீட்டை முறையாக தயாரித்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.