அனுரவின் இந்திய விஜயத்தை பொறுக்காத சஜித் – தம்மையும் அழைக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம்

3 weeks ago
Sri Lanka
aivarree.com

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழு அண்மையில் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு பல முக்கிய சந்திப்புகளை முன்னெடுத்தது.

இதுதொடர்பாக சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தவிடயத்தை இந்தியாவிடம் எடுத்துச் சொல்லிய சஜித் தரப்பினர், தங்களது தலைவர் சஜித் பிரேமதாசவையும் அவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைக்குமாறு கோரியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்தியா இதற்கு சாதகமான பதிலை வழங்கி இருப்பதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.