அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள பயன்பாட்டிற்கு தடை விதித்த பாகிஸ்தான்

2 months ago
World
aivarree.com

பாகிஸ்தானில், தேவையற்ற செலவீனங்களை குறைப்பதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அரச நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுவது இனி நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ஷெரீப்பின் உத்தரவுக்கமைய இத்தடை அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரச நடைமுறையின்படி வெளிநாட்டு தலைவர்கள் வருகையின்போது, சிவப்பு கம்பளங்கள் பயன்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தானில், செலவீனங்களை குறைக்கும் நோக்கத்துடன், இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.