லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்பட்டது

4 months ago
aivarree.com

இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,111 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,652 ரூபாவாகும்.